Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்புக் வழங்கப்பட்டது !

Webdunia
புதன், 22 ஜூன் 2022 (23:15 IST)
கரூரில் நடிகர் விஜய் 48வது பிறந்த நாளையொட்டி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்புக் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டது.
 
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் 48வது பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றனர். கரூர் மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கரூர் மாநகராட்சி குமரன் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு நோட்புக் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இலவச சீருடைகள் வழங்கினர். இதேபோல் பல்வேறு இடங்களில் விஜய் பிறந்த நாளையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. கரூர் மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிக்டாக் நேரலையில் பேசி கொண்டிருந்த அழகி சுட்டுக்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

பாகிஸ்தான் கொடிக் கூட இங்க வரக் கூடாது! - அமேசான், இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அரசு அதிரடி உத்தரவு!

கர்ப்பிணி மனைவி, மாமனார், மாமியாரை வெட்டி கொன்ற வாலிபர்.. ராணிப்பேட்டையில் அதிர்ச்சி சம்பவம்..!

இதுதான் தமிழன் கலாச்சாரம்! சென்னை சிறுவன் செயலால் வியந்த வெளிநாட்டு பயணி! - வைரலாகும் வீடியோ!

இனி போட்டோ மாத்தி ஏமாத்த முடியாது! சிப் பொருத்திய e-Passport அறிமுகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments