Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓட்டுக்கேட்டு உள்ளே வராதே… தேர்தலை புறக்கணிக்கும் கிராம மக்கள்!

Webdunia
வெள்ளி, 19 மார்ச் 2021 (16:20 IST)
கோவை மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் தொகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள சிஙகாநல்லூர் தொகுதிக்குட்பட்ட கிராமம் ஒண்டிபுதூர். அந்த கிராமத்தில் சுமார் 1500 பேர் வசித்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கென்று பொதுக் கழிப்பிடம் இல்லாததால் மக்கள் அனைவரும் திறந்தவெளியில் மலம் கழித்து வருகின்றனர். இதனால் பெண்கள் பல இன்னல்களுக்கு ஆளாவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இதுவரை நடந்த தேர்தல்களில் எல்லாம் கழிப்பறை கட்டித்தருவேன் என்று உறுதியளித்த எந்த வேட்பாளரும் அதை நிறைவேற்றாததால் இந்த முறை தேர்தலை புறக்கணிக்க அந்த கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். மேலும் ’ஓட்டுக் கேட்டு உள்ளே வராதே என்ற பதாகையோடு போராட்டம் ஒன்றையும் நடத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக கொடிகள், துண்டுகள்.. திருப்பூரில் குவியும் ஆர்டர்கள்..!

அமெரிக்க தேர்தலில் வெற்றி எதிரொலி: தெலுங்கு டிரம்ப் கோவிலில் சிறப்பு வழிபாடு..!

நான் கேட்காமலேயே வரதட்சணை கொடுத்தனர்.. மனைவி குடும்பத்தின் மீது மாப்பிள்ளை வழக்கு..!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை ரிப்பன் மாளிகையை சுற்றி பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி: முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments