Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’ஒரே நாளில்’ துணை நடிகர் சண்முக ராஜன் மீதான பாலியல் புகாரை வாபஸ் பெற்றார் நடிகை ராணி..

Webdunia
திங்கள், 15 அக்டோபர் 2018 (19:31 IST)
துணை நடிகர் சண்முகராஜன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், தன்னை தாக்கியதாகவும் நடிகை ராணி இன்று காலையில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
 
மீ டூ விவகாரம் தற்போது நாடெங்கும் பற்றி எரிகிறது. பாலிவுட்டில் நானா பாடேகர் உள்ளிட்ட சில நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் சிக்கியுள்ளனர். அதேபோல், கோலிவுட்டில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல்  புகாரை கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து பல்வேறு துறையை சேர்ந்த பல பெண்களும், தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து தற்போது வெளிப்படையாக கூறி வருகின்றனர்.
 
இந்நிலையில் நடிகர் சண்முகராஜன் தனக்குன் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அதற்கு தான் இணங்க மறுத்ததால் தன்னை பலமாக கன்னத்தில் தாக்கியதாகவும் இன்று காலையில் நடிகை ராணி போலீஸ் ஸ்டேசனில் சண்முகராஜனுக்கு எதிராக புகார் தெரிவித்திருந்தார்.
 
 இந்நிலையில், நாட்டாமை படத்தில் டீச்சர் வேடத்திலும், விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் ‘ஓ போடு’ பாடலுக்கு நடனமாடியவருமான நடிகை ராணி காவல் நிலையத்தில் துணை நடிகர் சண்முகராஜன் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார்.
 
 ஒரு விளம்பர படத்தில் நடித்த போது சண்முகராஜன் தன்னை படுக்கைக்கு அழைத்தார். அவரின் ஆசைக்கு நான் இணங்கவில்லை என்றதும் எனது உடலில் அங்கும் இங்கும் தொட்டு எனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தார். என் கணவர் இதை தட்டிக் கேட்டபோது சண்முகராஜன் என்னை தாக்கினார் என ராணி புகார் அளித்திருந்தார்.
 
இதனையடுத்து நடிகை ராணி தற்போது கூறியதாவது: ’நடிகர் நடிகர் சண்முக ராஜன் என்னிடம் மன்னிப்பு கேட்டதால் அவர் மீது திருவள்ளூர் அருகே செங்குன்றம் காவல் நிலையத்தில் இன்று காலையில் அளித்த பாலியல்  புகாரை வாபஸ் பெறுவதாக நடிகை இப்போது  (மாலை) கூறியிருக்கிறார்.’
 
இது குறித்து சண்முக ராஜன் கூறும்போது: ’ராணி கொடுத்த பாலியல் புகார் உண்மையில்லை: மேலும் எங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடு களைந்து சமாதானம் ஏற்பட்டுவிட்டது.’ இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
 
நடிகர் சண்முகராஜன் விருமாண்டி, எம்டன் மகன், சண்டக்கோழி உள்ளிட்ட பல தமிழ் படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்