Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுவையில் மேலும் ஒரு எம்.எல்.ஏ ராஜினாமா: நாராயணசாமி அரசு தப்பிக்குமா?

Webdunia
ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (15:04 IST)
புதுவையில் மேலும் ஒரு எம்.எல்.ஏ ராஜினாமா:
புதுவையில் ஏற்கனவே நான்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில் அம்மாநிலத்தில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு மெஜாரிட்டி இல்லை என்று கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஆளுநராக பொறுப்பேற்ற தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் நாளை மாலை 5 மணிக்குள் புதுவை முதல்வர் நாராயணசாமி தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார் 
 
இந்த நிலையில் புதுச்சேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன் என்பவர் இன்று ராஜினாமா செய்துள்ளார். அவர் இன்று சபாநாயகர் இல்லத்திற்குச் சென்று தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
 
நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் இன்று மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று ராஜினாமா செய்த லட்சுமி நாராயணன் அவர்களையும் சேர்த்து மொத்தம் 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது 
 
நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments