Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ்? அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்

Webdunia
திங்கள், 9 மார்ச் 2020 (19:08 IST)
சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவியது மட்டுமின்றி அண்டை நாடுகளிலும் அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளிலும் பரவி இருக்கும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவையும் தாக்கத் தொடங்கியது
 
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் மூன்று பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டது ஆனால் காஞ்சிபுரம் பெண்ணுக்கும் சென்னை சிறுவனுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை என்பது ரத்த மாதிரி சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தார்
 
இந்த நிலையில் தமிழகத்தின் ஒரே ஒருவரைத் தவிர வேறு யாருக்கும் பாதிப்பு இல்லை என்பதை டாக்டர் விஜயபாஸ்கர் உறுதி செய்துள்ளார். 72 பேருக்கு ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் 61 மாதிரிகளில் கொரோனா உறுதியாக இல்லை என்று அறிக்கைகள் கூறியிருப்பதாகவும், மீதி உள்ள உள்ளவர்களை அறிக்கைகள் எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்
 
எனவே இப்போதைக்கு தமிழகத்தில் ஒருவரை தவிர வேறு யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளதால் தமிழக மக்கள் நிம்மதியில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேலைநிறுத்தம் செய்யும் மருத்துவர்களின் கோரிக்கைகள்.. அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை..!

டாக்டர்களுக்கும், நோயாளிகளுக்கும் சரியான புரிதல் இருக்க வேண்டும்: தமிழிசை

மருத்துவர்கள் தாக்கப்படும்போது நடவடிக்கை எடுக்காததால் இன்னொரு சம்பவம்: அண்ணாமலை

புல்டோசர் வழக்கு: சொத்துகளை இடிக்கவழிக்காட்டு நெறிமுறைகள்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.. மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் குறித்து ஈபிஎஸ்..

அடுத்த கட்டுரையில்
Show comments