Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் விளையாட்டில் பணம் இழப்பு: இளம்பெண் தூக்கில் தொங்கி தற்கொலை!

Webdunia
ஞாயிறு, 27 நவம்பர் 2022 (15:41 IST)
ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த இளம் பெண் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய தமிழக அரசு மசோதா இயற்றிதை எடுத்து அந்த மசோதாவை கவர்னருக்கு அனுப்பி உள்ளது என்பதும் கவர்னர் இன்னும் அந்த மசோதாவில் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கவர்னர் இன்றுக்குள் அந்த மசோதாவில் கையெழுத்திடவில்லை என்றால் அந்த மசோதா காலாவதி ஆகிவிடும் 
 
இந்த நிலையில் தென்காசி மாவட்டத்தில் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததற்காக இளம்பெண் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 தென்காசி மாவட்டம் கரிவலம் வந்த நல்லூர் அருகே உள்ள வேலாயுதபுரம் என்ற பகுதியில் அஜய்குமார் மற்றும் பந்தனா மஜ்கி ஆகிய தம்பதிகள் மில்லில் வேலை பார்த்து வந்தனர்
 
இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பந்தனா மஜ்கி 70 ஆயிரம் ரூபாய் வரை பணம் இழந்ததாகவும், இதனால் அவரை அவரது கணவர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பந்தனா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments