Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலாவை கட்சியில் சேர்த்துக் கொள்வீர்களா? ஓபிஎஸ்-ன் பதில்!

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2022 (10:15 IST)
சசிகலாவை அதிமுகவில் மீண்டும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற குரல்கள் வலுவாக எழ ஆரம்பித்துள்ளன.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. முதலில் ஓபிஎஸ் தனியணியாக செல்ல, அதன் பின்னர் ஓபிஎஸ்-ம் ஈபிஎஸ்-ம் இணைந்து தனி அணியாக சசிகலா புறக்கணிக்கப்பட்டார். தண்டனைக் காலத்தை சிறையில் கழித்து வந்த பின்னர் அவர் மீண்டும் கட்சியில் சேருவாரா என்ற கேள்வி எழுந்தது.

ஒரு தரப்பினர் அவர் சேர வேண்டும் என்றும் மற்றொரு தரப்பினர் அவரை சேர்க்கக் கூடாது என்றும் குரல் எழுப்பி வந்தனர். இதில் மெல்ல மெல்ல ஓபிஎஸ் சசிகலா ஆதரவாளராக மாறி வருவதாக சொல்லப்படுகிறது. சட்டமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலின் தோல்விக்குப் பிறகு தொண்டர்கள் மத்தியில் மீண்டும் அதிமுகவில் சசிகலாவை சேர்க்கவேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சசிகலாவை கட்சியில் சேர்த்துக்கொள்ள ஓபிஎஸ் தரப்பு தயாராக உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் ஈபிஎஸ் அதற்கு எதிராக இருக்கிறார். சமீபத்தில் ஓபிஎஸ்-ன் தம்பி ஓ ராஜா சசிகலாவை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஓபிஎஸ்-டம் சசிகலாவை கட்சியில் சேர்த்துக் கொள்வீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் ‘ஐயோ சாமி… வாங்க சாமி’ என கூறிவிட்டு சென்றுவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர் பெயரில் புதிய ப்ராண்ட்! ட்ரேட்மார்க் விண்ணப்பித்த ரிலையன்ஸ் நிறுவனம்!

லாகூர் தொடர் வெடிகுண்டு வெடிப்பை அடுத்து கராச்சியிலும் குண்டுவெடிப்பு: மக்கள் பீதி..!

பாகிஸ்தான் வாங்கிய சீன ஏவுகணைகள்.. இடையிலேயே வழிமறித்து அழித்த இந்தியா..!

அமைச்சர் ரகுபதியின் துறை துரைமுருகனுக்கு..! அமைச்சரவை இலாகா திடீர் மாற்றம்!

தோல்வி பயத்தால் தற்கொலை செய்த மாணவி.. ஆனால் 413 மதிப்பெண் எடுத்து பாஸ்.. பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments