Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜகா வாங்க மாட்டார் எங்க தலைவர்.. ஆனா முதல்வர்தான்! – போஸ்டர் அடித்த ஓபிஎஸ் விசிறிகள்!

Webdunia
திங்கள், 5 அக்டோபர் 2020 (10:41 IST)
அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து கட்சிக்குள் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் தேனியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒட்டிய பேனர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் குறித்து ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து இருவரையும் அதிமுக அமைச்சர்கள் சந்தித்து பேசி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரையும் அக்டோபர் 6ம் தேதி சென்னை வர அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

முதல்வர் வேட்பாளர் குறித்து அதிமுக தலைமை 7ம் தேதி அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சொந்த ஊரான பெரிய குளத்தில் உள்ள ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் மூன்று நாட்களாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தேனியில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்ட விழா ஒன்றிற்கு அவரது ஆதரவாளர்கள் பேனர் வைத்துள்ளனர். அதில் தமிழகத்தின் அடுத்த முதல்வரே என குறிப்பிட்டுள்ளனர். அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து 7ம் தேதி அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் இந்த பேனர் சம்பவம் அதிமுக வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் ரேஞ்சர்.. விசாரணையில் திடுக் தகவல்..!

3 வயது குழந்தைக்கு ஆன்மீக சிகிச்சை.. பரிதாபமாக உயிரிழந்ததால் அதிர்ச்சி..!

பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்த சிஆா்பிஎஃப் வீரர் விசாரணையின்றி டிஸ்மிஸ்.. பெரும் பரபரப்பு..!

இந்து கோவிலுக்குள் நுழைந்து தேவி சிலை மீது சிறுநீர் கழித்த வாலிபர்.. பெரும் கொந்தளிப்பு..!

மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments