Publish Date: Friday, 30 January 2026 (17:42 IST)
Updated Date: Friday, 30 January 2026 (01:44 IST)
ஈரோடு கிழக்கு தொகுதியின் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக திமுக உள்பட அரசியல் கட்சிகள் அனைத்தும் சுறுசுறுப்பாகியுள்ளன என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளரை நிறுத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாகவும் பாஜகவுக்கு அந்த தொகுதியை அளிக்க அவர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது
அதே போல் திமுக தரப்பில் காங்கிரஸ் கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கப்படும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் அதிமுகவின் இன்னொரு பிரிவான ஓ பன்னீர்செல்வம் தரப்பு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை வரும் 23ஆம் தேதி கூட்ட திட்டமிட்டுள்ளது
இந்த கூட்டத்தின் போது ஈரோடு கிழக்கு தொகுதி குறித்த முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கும் வேட்பாளருக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பிலிருந்து வேட்பாளர் அறிவிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.