சட்டமன்றமே எங்களை அங்கீரித்தது பாசிட்டிவாக பார்க்கிறேன் என ஓ.பன்னீர் செல்வம் பேட்டி.
அதிமுக தலைமை குறித்து ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே மோதல் நிலவி வருகிறது. கடந்த ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ்ஸை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் பொதுக்குழு கூட்டம் செல்லும் என நீதிமன்றம் அறிவித்தது.
இந்நிலையில் இன்று நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தில் எதிர்கட்சி துணை தலைவர் இருக்கையில் ஓபிஎஸ் அமரக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.
ஆனால் சட்டசபையில் இருக்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எடப்பாடி பழனிசாமி இருக்கை அருகில் எதிர்கட்சி துணை தலைவர் இருக்கையிலேயே ஓபிஎஸ் அமர்ந்துள்ளார். அவரது ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்டோரும் பேரவை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தகவல். மேலும், அதிமுக பொதுக்குழு முடிவுகளை சட்டசபை அங்கீகரிக்காதது குறித்து அவர்கள் அதிருப்தியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது, அதிமுக சார்பாக எங்களது ஜனாநாயகக் கடமைகளை நிறைவேற்றுவதற்காக சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டோம். கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன் சபாநாயகரை சந்தித்து பேசினோம். எம்.ஜி.ஆர், தொண்டர்களுக்காகத்தான் அதிமுகவை தொடங்கி மூன்று முறை முதல்வராக இருந்தார்.
எம்.ஜி.ஆர். மறைவிற்கு பின் பொதுச்செயலாளராக பதவியேற்று முதல்வராகவும் பொறுப்பேற்று ஆட்சி செய்தார். அடிப்படை தொண்டர்கள் ரத்தம் சிந்தி வளர்த்த இயக்கம் அதிமுக சட்ட விதி, அடிபிறழாமல் கட்டிக்காத்த மாண்பு, பலநூறு ஆண்டுகளானாலும் சட்டவிதியை எந்தவித மாசுவும் படாமல் காக்கும் பொறுப்பில் இருக்கிறோம்; தொண்டர்கள்தான் அடித்தளம், ஆணிவேர். சட்டமன்றமே எங்களை அங்கீரித்தது பாசிட்டிவாக பார்க்கிறேன் என ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
Edited By: Sugapriya Prakash