Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடியாருக்கு எதிராக தமிழகம் முழுவதும் பிரச்சாரம்?? – ஓபிஎஸ் பலே திட்டம்!

Webdunia
ஞாயிறு, 26 ஜூன் 2022 (08:34 IST)
அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிமுக தொண்டர்களிடத்தில் ஓபிஎஸ் பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமையை கொண்டு வருவது குறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் நிகழ்ந்து வருகிறது. சில நாட்கள் முன்னதாக நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இதுகுறித்த பேச்சால் பரபரப்பு எழுந்த நிலையில் எந்த வித தீர்மானமும் நிறைவேறாமல் பொதுக்குழு கூட்டம் முடிவடைந்தது.

அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் டெல்லி சென்ற ஓபிஎஸ் அணி அங்கு தேர்தல் ஆணையத்திடம் இதுகுறித்து புகார் மனுக்களை அளித்துள்ளனர். பிறகு தற்போது சென்னை திரும்பியுள்ள ஓபிஎஸ் அதிமுகவில் நடந்து வரும் குழறுபடிகள் குறித்து தமிழ்நாடு முழுவதும் பயணித்து அதிமுக மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து தனக்கு ஆதரவு சேகரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பெருமிதம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு.. போர் பதட்டம் காரணமா?

அப்பாவிகளை அழித்தவர்கள் அழிந்துவிட்டார்கள்.. அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆவேசம்..!

நமது ராணுவத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்: பிரியங்கா காந்தியின் எக்ஸ் பதிவு..!

சி.பி.ஐ இயக்குநர் பிரவீன் சூட் ஓராண்டு பதவி நீட்டிப்பு.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments