Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரட்டை இலை சின்னத்தில் தான் நிச்சயம் போட்டியிடுவோம்! மீண்டும் உறுதி செய்த ஓபிஎஸ்

Mahendran
புதன், 13 மார்ச் 2024 (10:26 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் சொல்லும் பேட்டி அளித்தபோது இரட்டை இலை சின்னம் தங்கள் அணிக்கு தான் கிடைக்கும் என்று கூறியிருந்த நிலையில் தற்போது வரும் பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று மீண்டும் உறுதிபட கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரும் மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் அணி இணைந்து போட்டியிடப் போவதாகவும் அவருக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்க பாஜக ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது

ஏற்கனவே பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சி, தமிழகம் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ள நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் ஓபிஎஸ் அணி ஆகிய இரு கட்சிகளும் இணைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ பன்னீர்செல்வம் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை சமூகமாக முடிந்ததாகவும், இரட்டை இலை சின்னத்தில் தான் நாங்கள் நிச்சயம் போட்டியிடுவோம் என்றும் இரட்டை இலை சின்னம் பயன்படுத்துவதில் தற்காலிகமாக தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் இறுதி தீர்ப்பு எங்கள் அணிக்கு சாதகமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் ரேஞ்சர்.. விசாரணையில் திடுக் தகவல்..!

3 வயது குழந்தைக்கு ஆன்மீக சிகிச்சை.. பரிதாபமாக உயிரிழந்ததால் அதிர்ச்சி..!

பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்த சிஆா்பிஎஃப் வீரர் விசாரணையின்றி டிஸ்மிஸ்.. பெரும் பரபரப்பு..!

இந்து கோவிலுக்குள் நுழைந்து தேவி சிலை மீது சிறுநீர் கழித்த வாலிபர்.. பெரும் கொந்தளிப்பு..!

மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments