Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னுடைய எதிர்காலத்தை அவர்கள்தான் முடிவு செய்யணும்! – மனம்திறந்த ஓபிஎஸ்!

ADMK
Webdunia
ஞாயிறு, 26 ஜூன் 2022 (15:24 IST)
அதிமுகவில் தான் நீடித்திருப்பதா இல்லையா என்பது குறித்து யார் முடிவு செய்வார்கள் என்பது குறித்து ஓபிஎஸ் பேசியுள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமையை கொண்டு வருவது குறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் நிகழ்ந்து வருகிறது. சில நாட்கள் முன்னதாக நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இதுகுறித்த பேச்சால் பரபரப்பு எழுந்த நிலையில் எந்த வித தீர்மானமும் நிறைவேறாமல் பொதுக்குழு கூட்டம் முடிவடைந்தது.

அடுத்த பொதுக்குழு கூட்டம் நடத்துவது குறித்த விவாதம் எழுந்துள்ள நிலையில் ஓபிஎஸ்ஸை கட்சியை விட்டு நீக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் “பன்னீர்செல்வத்தை போன்ற தூய தொண்டனை பெற்றது என் பாக்கியம் என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எனக்கு சான்றிதழ் அளித்துள்ளார். என்னுடைய எதிர்காலம் குறித்து அதிமுகவின் உண்மையான தொண்டர்களும், மக்களும்தான் முடிவு செய்வார்கள்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments