Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிரட்டல்.. உருட்டல்.. கலக்கலுக்கு பின்னர் கம்பீரமாய் தலைவர் பதவியேற்ற பன்னீர்செல்வத்தின் சகோதரர்

Webdunia
வியாழன், 27 டிசம்பர் 2018 (11:09 IST)
நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின்னர் பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இன்று பொறுப்பேற்றுள்ளார்.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் தேனி பகுதியில் செல்வாக்கு மிக்க பிரமுகராக வலம் வந்தார். கடந்த வாரம் மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஓ.ராஜா, தேர்தலில் முறைகேடான வழிகளைப் பயன்படுத்தி வெற்றி பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டதால் அவரை முதல்வரும், துணை முதல்வரும் சேர்ந்து அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினர். 
 
இது அரசியல் வட்டாரத்தில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.ராஜா அதிமுகவில் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டார். இது பலரிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஓ.ராஜா தான் செய்த தவறை உணர்ந்ததால் அவர் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டார் என கட்சி மேலிடம் விளக்கமளித்தது. 
ஆனால் ஓ.ராஜா, அதிமுகவின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றிவிடுவேன் என மிரட்டியதாகவும் இதனால் கதிகலங்கிப்போன அதிமுக மேலிடம் அவரை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொண்டதாகவும் தகவல் வெளியானது. இதில் பாஜகவின் தலையீடு உள்ளது எனவும் கிசிகிசுக்கப்படுகிறது.
 
இந்நிலையில் ஓராஜா மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இன்று பதவியேற்றுக் கொண்டார். ஓபிஎஸ் தான் கில்லாடி என்றால் அவரது தம்பி அதை விட கில்லாடியாய் காய் நகர்த்தி அதிமுகவின் ஆணிவேரிலே கை வைத்து தான் நினைத்ததை சாதித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments