Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்ச் 11ம் தேதி 4 மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

Prasanth Karthick
ஞாயிறு, 9 மார்ச் 2025 (15:02 IST)

தமிழகத்தின் பல பகுதிகளில் வெயில் வாட்டி வரும் நிலையில் மார்ச் 11ம் தேதி கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தமிழ்நாட்டில் பருவமழை காலம் முடிந்த நிலையில் மார்ச் தொடக்கம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாகவே வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் முன்னரே தெரிவித்திருந்தது.

 

இந்நிலையில் நாளை மறுநாள் (மார்ச் 11) தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ALSO READ: நாக்கில் குங்குமப்பூ.. ஷாருக்கான், அஜய்தேவ்கன் மீது வழக்கு!
 

அதன்படி, வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக் கூடும்

 

நாளை மறுநாள் கன்னியாக்குமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டிணம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரையிலும் பெய்யக்கூடும்.

 

மார்ச் 12, 13ம் தேதிகளில் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும், 14, 15ம் தேதிகளில் பொதுவாக வறண்ட வானிலையும் நிலவும் என கூறப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கும்மிருட்டில் பள்ளம்! தவறி விழுந்த தம்பதி! இரவு முழுவதும் துடித்த உயிர்கள்! - திருப்பூரில் கோர விபத்து!

பெஹல்காம் சம்பவத்தில் முஸ்லீம் இளைஞர்களின் துணிச்சல் ஆறுதல் அளிக்கிறது: வைகோ

நீட் தேர்வுக்கு முந்தைய நாளில் மாணவி மரணம்.. கோட்டா என்பது பயிற்சி நகரமா? பலி நகரமா?

கண்ணுக்கு எதிரே மோதிக் கொண்ட கார்கள்.. பதறி ஓடிவந்த பிரியங்கா காந்தி! - வைரலாகும் வீடியோ!

முகலாயர்கள் பாடங்களை நீக்கிய NCERT! ஏன் இதை செய்யல? - நடிகர் மாதவன் கேள்வி!

அடுத்த கட்டுரையில்
Show comments