Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒட்டுமொத்த காவல்துறையையும் மோசமல்ல … ஹரிக்கு பிரபல இயக்குநர் பதிலடி !

Webdunia
திங்கள், 29 ஜூன் 2020 (21:59 IST)
இந்த நிலையில் காவல்துறையை பெருமைப்படுத்தி 5 படங்கள் இயக்கியதற்கு வெட்கப்படுகிறேன் என இந்த படங்களின் இயக்குநர் ஹரி அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சாத்தான்குளம் விவகாரம் குறித்து ஏற்கனவே பல கோலிவுட் பிரபலங்கள் கருத்து கூறிய நிலையில் தற்போது இதுகுறித்து இயக்குனர் ஹரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

சாத்தான்குளம் சம்பவம் போல் இனி ஒரு கொடூரம் நடந்துவிட கூடாது. இதற்கு ஒரே வழி குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்குவதே. காவல்துறையில் உள்ள சிலரின் அத்துமீறல் அந்த துறையையே களங்கப்படுத்தியுள்ளது! காவல்துறையை பெருமைப்படுத்தி 5 படம் எடுத்ததற்காக வெட்கப்படுகிறேன்!” என்று இயக்குனர் ஹரி அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்,  பிரபல இயக்குநர் அருண் வைத்தியநாதன் தனது ஃப்ஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

தற்போது, தமிழகத்தில் கோவிட் 19, என்ற கொரோனாவுக்காக போலீஸார் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.  ஆனால் ஒரு சில கருப்பாடுகள் உள்ளனர்.. இந்த சம்பவத்தை வைத்து ஒட்டுமொத்த காவல்துறையையும் நாம் குற்றம் சொல்ல முடியாது. என்னுடைய பிரார்த்தனை எப்போதும் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு உண்டு, நீதி சீக்கிரம் கிடைக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

Overall police are not bad… Hari's famous director retaliates!

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments