Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொந்த சகோதரரை கட்சியிலிருந்து நீக்கிய ஓ. பன்னீர்செல்வம்

Webdunia
புதன், 19 டிசம்பர் 2018 (17:27 IST)
அதிமுக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும் துணைமுதல்வருமான  ஓ. பன்னீர் செல்வத்தின் சகோதரரான ஓ. ராஜா இன்று அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். 
மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய தலைவராக ஓ. ராஜா தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில் ஓ.பிஎஸ் - ஈபிஎஸ் ஆகிய இருவருமாக கூட்டாக அவரை கட்சியிலிருந்து இன்று நீக்கி உத்தரவிட்டுள்ளனர்.
 
இதுசம்பந்தமாக ஒபிஎஸ் - ஈபிஎஸ் ஆகிய இருவரும் சேர்ந்து விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
’அதிமுகவினர் யாரும் ஓ.ராஜாவுடன் எந்தவித  தொடர்வும் வைத்துக்கொள்ளக் கூடாது.ராஜா அதிமுக அரசின் கொள்கை கோட்பாடுகளுக்கு எதிராகவும், முரணாகவும் செயல்பட்டதாகவும், கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் ராஜாவை  அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டதாக இதில் கூறப்பட்டுள்ளது.
 
கட்சியில் இருந்து நீக்கபட்ட ஓ.ராஜா தரப்பில் இருந்து இதுவரை பதில் எதுவும் தெரிவிக்கவில்லை.
 
ஓ.ராஜா தலைமைக்குத் தெரியாமல் தலைவராக தேர்வு செய்யப்பட்டு, கட்சி கட்டுப்பாட்டை மீறியதால் தான் இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளதாகக் கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஷ்டத்துக்கு பேசிட்டு மன்னிப்பு கேட்டா ஆச்சா? பெண் ராணுவ அதிகாரி விவகாரத்தில் பாஜக அமைச்சருக்கு குட்டு!

வேலூரில் ரோடு ஷோ.. தவெக தலைவர் விஜய் திட்டம்..

இந்தியாவின் இன்னொரு தொழிற்சாலை.. டிரம்ப் பேச்சை மதிக்காத ஆப்பிள் டிம் குக்..!

தமிழகத்தை உலுக்கிய சிவகிரி கொலை வழக்கு! தமிழக காவல்துறையின் ஆக்‌ஷனுக்கு அண்ணாமலை வாழ்த்து!

இந்தியாவின் ஒரே ஒரு நடவடிக்கை.. பங்களாதேஷ்க்கு ரூ.6581 கோடி இழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments