Daily Horoscope

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உங்க மனைவியை திட்டும்போது ஏன் கம்முன்னு இருந்தீங்க?!.. பரந்தாமன் கேள்வி!...

Advertiesment
paranthaman
நேற்று மதுராந்தகம் தொகுதி பிரச்சார கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் ஜோசப் விஜய் திமுகவுகு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். திமுக ஆட்சியில் வீரமணியை தப்பிக்க விட்டார்கள்.. பல குழந்தைகளை அவன் சீரழித்திருக்கிறான்.. இவர்களுக்குள் என்ன டீலிங் முடிந்தது என்று தெரியவில்லை.. அந்த வழக்கை இழுத்து மூடிவிட்டனர்..

ஆனால் நாங்கள் வழக்கை தோண்டியெடுத்து தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஒரு பக்கம் திமுகவினர் எப்பொதும் பெண்களுக்கு எதிராக மிகவும் ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசுகிறார்கள்.. ஒரே ஆபாச நதி ஓடுகிறது.. திமுகவினர் ஆபாசமாக பேசுவதை திமுக தலைமை குடும்பமாக அமர்ந்து ரசிக்க்கிறார்கள். திமுக தலைமையும் அப்படித்தான் பேசுகிறது’ என்று விஜய் பேசி இருந்தார்..

இந்நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளர் பரந்தாமன் ‘பாலியல் குற்றச்சாட்டுகளில் உங்கள் கட்சிக்காரர்கள்தான் அதிகமாக ஈடுபட்டு வருகிறார்கள். என்னமோ பெண்களுக்கு அக்கறையாக பேசுகிறீர்களே விஜய் சார்.. உங்கள் மனைவி விவகாரத்து வழக்கு தொடர்ந்தபோது உங்க கட்சிக்காரர்கள் அவரை மிகவும் அவதூறாக பேசினார்கள்.. அதை தட்டிக் கேட்க உங்களால் முடியல.. தமிழ்நாட்டு பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசுறீங்க.. எழுதிக் கொடுக்கும் ஸ்கிரிப்ட் அப்படியே வாந்தி எடுக்காதீங்க.. யோசிச்சு பேசுங்க’ என கூறியிருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2026-27 நிதியாண்டில் அந்நிய முதலீட்டில் முதலிடத்தில் தமிழ்நாடு!..