Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும்: கல்வித்துறை அறிவுறுத்தல்

Mahendran
வெள்ளி, 24 மே 2024 (11:53 IST)
பிள்ளைகளின் கல்வி செயல்பாடுகளை தெரிந்து கொள்ள குறைந்த விலை ஸ்மார்ட் போன்களையாவது பெற்றோர்கள்  வாங்க வேண்டும் என்று கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
 
மாணவர்களின் கல்வி செயல்பாடுகளை பெற்றோருக்கு உடனுக்குடன் தெரிவிக்கும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், தற்போது வரை 80 லட்சத்து 30 ஆயிரம் பெற்றோர்களின் மொபைல் எண்களை கல்வித்துறை உறுதி செய்துள்ளது என்றும், இந்த மாதத்திற்குள் ஒரு கோடியே 25 லட்சம் மொபைல் எண்களும் உறுதி செய்யப்படும் - கல்வித்துறை தெரிவித்துள்ளது.
 
வாட்ஸ் அப் போன்ற செயலிகள் மூலம் மாணவர்களின் கல்வி செயல்பாடுகளை பெற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் ஸ்மார்ட் போன்கள் பெற்றவர்கள் வைத்திருப்பது அவசியம் என்றும் எனவே பெரிய அளவில் ஸ்மார்ட் ஃபோன்கள் வாங்க முடியாவிட்டால் குறைந்த விலையில் உள்ள ஸ்மார்ட் ஃபோன்களை யாவது பெற்றோர்கள் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அது அவர்களுடைய பிள்ளைகளின் கல்வி நிலையை அறிந்து கொள்ள பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் கல்வித் துறை அறிவுள்ளது. 
 
ஏற்கனவே தனியார் பள்ளிகள் பல ஆண்டுகளாக இந்த நடைமுறையை செயல்படுத்தி வரும் நிலையில் தற்போது அரசு பள்ளிகளிலும் மாணவர்களின் கல்வி நிலையை பெற்றோர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் மொபைல் ஃபோன்களுக்கு தகவல்கள் அனுப்பப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அயோத்தி கோயில் கும்பாபிஷேகத்திலும் திருப்பதி லட்டு விநியோகம்..! விசாரணை நடத்த வேண்டும் - தலைமை அர்ச்சகர்.!!

அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு அவமரியாதை - இதுவா திராவிட மாடல் சமூக நீதி.? ராமதாஸ் கண்டனம்..!

மக்களை திசை திருப்புவதற்காக தமிழகத்திற்கு லட்டு பிரச்சனை- சீமான் பேச்சு!

தடையில்லா சான்று வக்பு நிலத்திற்கு கொடுக்க முடியாது -நவாஸ் கனி எம்பி பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments