Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளை பெற்றால் மட்டும் போதாது! மயில்சாமி ஆவேச குற்றச்சாட்டு

Webdunia
வியாழன், 31 அக்டோபர் 2019 (08:08 IST)
ஒரு குழந்தையை பெற்றால் மட்டும் போதாது, அந்த குழந்தையை பாதுகாப்புடன் குறைந்தது ஐந்து வயது பெற்றோர்கள் வளர்க்க வேண்டும் என்று நடிகர் மயில்சாமி தெரிவித்துள்ளார்.
 
சிறுவன் சுஜித்தை அடுத்து தூத்துகுடியில் டிவி பார்த்து கொண்டிருந்த தம்பதியின் மகள் மரணம், பன்ருட்டியில் கழிவு நீர் தொட்டியில் விழுந்த குழந்தையின் மரணம், விருதுநகரில் மழைநீர் சேகரிப்பு தொட்டியில் விழுந்து குழந்தை ஒன்றின் மரணம் என அடுத்தடுத்து குழந்தைகளின் மரணம் தமிழகத்தையே உலுக்கி வருகிறது
 
இந்த நிலையில் நடுக்காட்டுப்பட்டி சுஜித்துக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் மயில்சாமி செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘ஒரு குழந்தையை பெற்றால் மட்டும் போதாது, அந்த குழந்தை ஐந்து வயது ஆகும் வரை அதாவது விபரம் தெரிந்து தானாகவே ஒரு வேலையை செய்யும் வரை பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக தாய்மார்கள் குழந்தையின் மீது ஒரு கண் வைத்து கொண்டே இருக்க வேண்டும்.
 
அரசை மட்டுமே குறை சொல்லிக்கொண்டு இருப்பது சரியல்ல என்றும் பெற்றோர்களும் குழந்தைகளை பாதுகாப்புடன் வளர்க்க வேண்டும் என்ற பொருப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டும் என்றும் இனிமேலும் இதுபோன்ற ஒரு சம்பவம் ஏதும் நடக்காதவாறு அரசும் பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று  மயில்சாமி கூறினார் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments