Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாம் கூட்டணி வைத்தே ஆகவேண்டும் – தினகரனுக்கு அழுத்தம் கொடுத்த நிர்வாகிகள் !

Webdunia
திங்கள், 3 ஜூன் 2019 (10:55 IST)
தேர்தலில் நாம் கூட்டணி வைக்காததால் நம்மைக் குறிவைத்து அனைவரும் தாக்குகின்றனர் என தினகரனிடம் கட்சி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் முடிவுகள் அமமுக, தமிழகத்தில் உள்ள திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்று கட்சியாக இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் பேரிடியாக விழுந்துள்ளது. தமிழ்நாட்டின் 300க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் அமமுகவிற்கு ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. முகவர்களின் வாக்குகள் கூடவா எங்களுக்கு விழவில்லை என டிடிவி தேர்தல் ஆணையத்துக்குக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனால் தினகரனின் இந்த குற்றச்சாட்டுக்கு ஆதரவாக எந்தக் கட்சிகளும் அவருக்குக் குரல் கொடுக்கவில்லை. இதையடுத்து இரண்டு நாட்களுக்கு  முன்னர் நடந்த அமமுகவின் தேர்தல் தோல்வி குறித்த ஆய்வுக் கூட்டத்தில்  இது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது பேசிய முக்கிய நிர்வாகி ஒருவர் ‘நாம் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டதால்தான் நம்மைக் குறிவைத்துப் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். அதனால் இனி முதற்கொண்டு தேர்தல்களில் நாம் கண்டிப்பாக கூட்டணி அமைத்தே தீர வேண்டும்.’ எனக் கூறியுள்ளார்.

இதற்கு என்ன பதில் சொல்வதென தெரியாத தினகரன் உங்கள் கருத்து பரிசீலிக்கப்படும் என கூறியுள்ளதாக அமமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதியில் ரூ.500 கோடி செலவில் 10 மாடி பஸ் நிலையம்.. ஆந்திர அரசு அறிவிப்பு..!

2026 தேர்தலில் தனித்து போட்டி.. சீமான் அறிவிப்பு.. 4 அணிகள் போட்டியா?

மீண்டும் ரூ.70,000ஐ தாண்டிய தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.280 உயர்வு..!

முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு தீவிரமான புற்றுநோய்.. அமெரிக்க மக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments