Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பருத்திவீரன் படத்தில் நடித்த செவ்வாழை ராசு காலமானார்: திரையுலகினர் இரங்கல்..!

Webdunia
வியாழன், 18 மே 2023 (12:18 IST)
கார்த்தி நடித்த பருத்திவீரன் என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் செவ்வாழை ராசு என்பவர் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இயக்குனர் அமீர் இயக்கத்தில் கார்த்தி, பிரியாமணி நடிப்பில் உருவான திரைப்படம் பருத்திவீரன். இந்த படத்தில் பிணம் தின்னி என்ற கேரக்டரின் மூலம் பிரபலமானவர் செவ்வாழை ராசு. இவர் கிழக்கு சீமையிலே, மைனா, கந்தசாமி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செவ்வாழை ராசு இன்று சிகிச்சையின் பலன் இன்றி காலமானார். அவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

தேனி மாவட்டம் வருசநாடு என்ற பகுதியை சேர்ந்த அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மறைந்த செவ்வாழை ராசுவுக்கு வயது 70.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காவல்துறையினர் சோதனை..!

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments