Publish Date: Mon, 30 Aug 2021 (19:45 IST)
Updated Date: Mon, 30 Aug 2021 (19:46 IST)
தமிழகத்தில் செப்டம்பர் 15ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து கடற்கரைகளும் மூடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது
சமீபத்தில் கடற்கரைகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் சென்னை மெரினா உள்பட பல கடற்கரைகள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது
இதனையடுத்து சென்னை மெரினா கடற்கரை மூடப்படும் அபாயம் இருப்பதாகவும் கூறப்பட்டது இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைகள் அனைத்தும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடற்கரைக்குச் செல்ல அனுமதி இல்லை என சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் மக்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்