Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்ட உறைகள் திறப்பு! – காரைக்குடியில் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 31 டிசம்பர் 2019 (12:39 IST)
உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் உறைகள் பிரிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகம் முழுவது ஊராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்தன. முதற்கட்ட தேர்தலின் போது பிரச்சினைகள் ஏற்பட்ட பகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தலின்போது மறு தேர்தல் நடைபெற்றது.

தேர்தல் முடிந்த நிலையில் வாக்குப்பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை ஒன்றியத்தில் நடைபெற்ற தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் அழகப்பா கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை முகவர்கள் சென்று பார்த்த போது 10 வாக்குப்பட்டிகளின் உறைகள் பிரிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து வாக்குப்பெட்டிகளில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டிய முகவர்கள் சீல் தங்கள் முன்பு உடைக்கப்படவில்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் காரைக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்து கோவிலுக்குள் நுழைந்து தேவி சிலை மீது சிறுநீர் கழித்த வாலிபர்.. பெரும் கொந்தளிப்பு..!

மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்..!

அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்த இஸ்லாமிய பெண் கைது.. விசாரணையில் திடுக் தகவல்..!

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments