Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 18 ஆனது

Webdunia
வியாழன், 23 ஜூலை 2020 (07:09 IST)
தமிழகத்தில் மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா:
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் சென்னை மட்டுமின்றி பிற மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகமாகி வருகிறது என்பதையும் பார்த்தோம். மேலும் நேற்று மட்டும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6000ஐ நெருங்கிவிட்டது என்பதும் அதிர்ச்சிக்குரிய ஒரு தகவல் ஆகும்
 
இந்த நிலையில் பொதுமக்கள் மட்டுமின்றி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் போன்றவர்களும் கொரோனா வைரஸால் கடந்த சில வாரங்களாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே அமைச்சர்கள் உள்பட 17 எம்எல்ஏக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் அவர்களில் சிலர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி மேலும் ஒரு அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் பேராவூரணி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராஜூ அவர்களுக்கு கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அவர் தஞ்சை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
 
பேராவூரணி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராஜூ அவர்களையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை மொத்தம் அமைச்சர்கள் உள்பட 18 எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொளுத்தும் கோடை வெயில்! பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்படுகிறதா? - அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்!

கள்ளக்காதலியின் 16 வயது மகளுக்கு பாலியல் வன்கொடுமை: 45 வயது நபர் கைது..!

இன்று முதல் வி.ஐ.பி. சிறப்பு தரிசனம் நேரம் மாற்றம்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு..!

ரயில் பயணிகளே! டிக்கெட் முன்பதிவு, தட்கல் புக்கிங் செய்வதில் அதிரடி மாற்றங்கள்! இன்று முதல் அமலாகிறது!

இந்தியாவை கைப்பற்றி, பாபர் மசூதியை மீண்டும் கட்டுவோம்! - பாகிஸ்தான் செனட்டர் பேச்சால் சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments