Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளியங்கிரி மலை கோவிலில் மகா தீபம் ஏற்ற அனுமதியா? நீதிமன்றத்தில் வனத்துறை முக்கிய தகவல்..!

Siva
திங்கள், 9 டிசம்பர் 2024 (17:04 IST)
கார்த்திகை தீப திருவிழாவின் போது வெள்ளியங்கிரி சிவன் கோயிலில் மகா தீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வனத்துறை தெரிவித்துள்ளது.

வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் அமைந்துள்ள சுயம்புலிங்க கோவில் ஆன வெள்ளியங்கிரி சிவன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் மகா தீபம் ஏற்றப்படும் என்பதும் வனத்துறை அனுமதி வழங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த ஆண்டும் வெள்ளியங்கிரி மலை கோவிலில் தீபம் ஏற்ற அனுமதிக்கப்பட வேண்டும் என்று விண்ணப்பம் கொடுத்திருந்த போதிலும் அந்த   விண்ணப்பம் பரிசீலிக்க படவில்லை என்பதால் இந்த குறித்து வழக்கு நீதிமன்றம் சென்றது.

இந்த வழக்கு இன்றைய விசாரணைக்கு வந்த போது வெள்ளியங்கிரி மலை கோவிலில் பூஜை செய்ய செம்மேடு கிராமத்தை சேர்ந்த மூன்று பேருக்கு அனுமதி அளித்துள்ளதாகவும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை பூஜை செய்ய அனுமதி வழங்கப்படுவதாகவும் வனத்துறை தெரிவித்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் ஆயுதங்கள் எடுத்துச் செல்லக்கூடாது, விலங்குகளை வேட்டையாட கூடாது, விலங்குகளுக்கு எந்த தீங்கும் இழைக்கக் கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.

இந்த நிலையில் மனுதாரர் தரப்பில் 10 மணி முதல் 3 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் அந்த நேரத்திற்குள் மலையில் ஏறி இறங்க முடியாது என்று கூறியபோது, அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ’கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் காலை 7:00 மணி முதல் மாலை 4 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ராணுவ இணையதளத்தை ஹேக் செய்த பாகிஸ்தான்? - சைபர் தாக்குதலால் பரபரப்பு!

அம்பானி வீட்டை காப்பாற்ற தான் வக்பு திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டதா? கனிமொழி எம்.பி

ஹரியானாவுக்கு ஒரு சொட்டு நீர் கூட வழங்க முடியாது: பஞ்சாப் அரசு

2 நாட்களாக துரத்தி துரத்திக் கடித்த தெருநாய்! 10 பேரை கடித்ததால் பரபரப்பு! - பீதியில் மக்கள்!

அகமதாபாத்தில் ஒரு மினி வங்கதேசம்.. 4000 வீடுகள் இடிப்பு.. முக்கிய நபர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments