Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிருஷ்ணார்-அர்ஜூனரை சமாளிக்கும் பாஞ்சாலி சோனியா: பீட்டர் அல்போன்ஸ்

Webdunia
திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (08:29 IST)
பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவரையும் மகாபாரதத்தில் உள்ள கேரக்டர்களான கிருஷ்ணர் மற்றும் அர்ஜூனர் ஆகியவர்களை உவமைப்படுத்தி நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அவர் பேசிய இந்த பேச்சு அரசியல்வாதிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக சோனியா காந்தி நியமனம் செய்துள்ளார் செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகிய இருவரை தவிர தலைமை ஏற்க வேறு யாரும் இல்லையா? என்று பலர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் இது குறித்து தனியார் தொலைக்காட்சி விவாதத்தின் போது கருத்து தெரிவித்த காங்கிரஸ் பிரமுகர் பீட்டர் அல்போன்ஸ், 'மகாபாரதத்தில் கிருஷ்ணர் அர்ஜூனரை மோடி மற்றும் அமித் ஷாவுக்கு உவமைப்படுத்தி கூறியவர்கள் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும். கிருஷ்ணர் அர்ஜுனனை சமாளிக்கும் பாஞ்சாலி ஆக அன்னை சோனியா இருப்பார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் 
 
முன்னதாக அதே விவாதத்தில் கலந்து கொண்ட பிரபல பத்திரிகையாளர் மாலன் கூறியபோது, 'காங்கிரஸ் கட்சியில் திருதிராஷ்டிரர்கள் இருக்கும் வரை பாஜகவில் அர்ஜுனர், கிருஷ்ணர் இருந்துகொண்டு தான் இருப்பார்கள் என்று தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ஆண்டு இயல்பை விட 90% மழை அதிகம் பெய்துள்ளது. வானிலை ஆய்வு மையம்..!

பாகிஸ்தானுக்கு முன் எச்சரிக்கை கொடுத்தது தவறு அல்ல, அது ஒரு குற்றம்!” ராகுல் காந்தி

”ஐயோ.. என் விளைச்சல்லாம் மழையில போகுதே” கதறிய விவசாயி Video! அமைச்சர் ரியாக்‌ஷன்!

பாகிஸ்தான் உளவுத்துறைக்கு உதவி! இந்திய தொழிலதிபர் கைது! - உ.பியில் பரபரப்பு!

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பது எப்போது? தெற்கு ரயில்வே தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments