Webdunia - Bharat's app for daily news and videos

Install App

97ஐ தொட்டது பெட்ரோல்: ரூ.100ஐ நெருங்குவது எப்போது?

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (07:26 IST)
கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வரும் நிலையில் இன்றும் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இன்று சென்னையில் பெட்ரோல் விலை ரூபாய் 97 தொட்டுவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை 23 காசுகள் உயர்ந்து 96.94 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல் டீசல் விலையும் 23 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது 91.15 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது 
 
பெட்ரோல் விலை ரூபாய் 97ஐ தொட்டுவிட்ட நிலையில் இன்னும் மூன்று ரூபாய் கூடினால் ரூ.100ஐ தொட்டு விடும் என்பதால் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் டீசலுக்கான விலையை குறைத்து பொது மக்களை காப்பாற்ற வேண்டும் என்றும் இல்லாவிட்டால் இந்த கொரோனா நேரத்தில் வருமானம் இன்றி இருக்கும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் சிக்கலாகிவிடும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

பொன்முடி மீது உடனே வழக்குப்பதிவு செய்ய வேண்டும்: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? துணை ஜனாதிபதி கடும் எதிர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments