Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி.. பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்?

Webdunia
செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (08:06 IST)
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையாதது ஏன் என எதிர் கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.
 
இந்தியாவில் கடந்த 275 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. இந்த நிலையில் இன்று 276 வது நாளாகவும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது. 
 
இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை வீழ்ச்சிக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பா.ஜ.க-வுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்..!

வயநாடு இடைத்தேர்தல்.. இன்றுடன் பிரச்சாரம் முடிவு.. ராகுல் - பிரியங்கா தீவிரம்..!

இது வெறும் டிரைலர் தான்.. சென்னை மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

ஈபிஎஸ் உடன் விவாதத்திற்கு நான் தயார்: துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு..!

மாஸ்கோ மீது டிரோன் தாக்குதல்: டிரம்ப் வெற்றிக்குப் பிறகு ரஷ்யா - யுக்ரேன் சண்டை மேலும் தீவிரம்

அடுத்த கட்டுரையில்
Show comments