வரத்து குறைந்துள்ளதால், சென்னை கோய்மபேட காய்கறி சந்தையில், வெங்காயத்தில் விலை யாரும் எதிர்பார்காத வகையில் கிலோ ரூ. 130க்கு விற்பனையாவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் , உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து பல மாநிலங்களுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஏற்கனவே, சில மாதங்களாக வடகிழக்குப் பருவமழை காரணமாக பெரிய வெங்காய் விளையும் இடங்களிலும், சின்ன வெங்காய் அதிகம் விளையும் தமிழகத்திலும் பயிர்கள் சேதம் அடைந்துள்ளது.
இதனால், சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது.
குறிப்பாக சென்னை கோயம்பேடு மார்கெட்யில் கடந்த வாரம், ரூ. 90க்கு விற்ற பெரிய வெங்காயம், தற்போது ரூ. 130க்கு விற்கப்படுகிறது.
கடந்த வாரம் ரூ.120 விற்ற சின்ன வெங்காயம் தற்போது ரூ,170க்கு விற்கப்படுகிறது. என்றுமில்லாத வகையில் வெங்காயத்தின் விலை உயர்வு மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.