Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரிட்சை ரொம்ப ஈசியா இருந்தது: பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் பேட்டி..!

Webdunia
திங்கள், 13 மார்ச் 2023 (17:03 IST)
இன்று முதல் பிளஸ் டூ பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில் இன்றைய தேர்வு மிகவும் எளிதாக இருந்ததாக மாணவ மாணவிகள் பேட்டி அளித்துள்ளனர்.
 
தமிழகம் முழுவதும் இன்று பிளஸ் டூ மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கியுள்ளது என்பதும் இதை சுமார் 8 லட்சம் மாணவ மாணவிகள் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று தேர்வு எழுதிய பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாணவ மாணவிகள் ’படித்த மாணவர்களுக்கு தேர்வு மிகவும் எளிதாக இருந்தது என்றும் நாங்கள் படித்த கேள்விகள் அனைத்தும் வந்திருந்தது என்றும் கண்டிப்பாக நல்ல மதிப்பெண்கள் வரும் என்றும் தெரிவித்தனர். 
 
பொது தேர்வு எழுத சொல்லும் போது எங்களுக்கு கொஞ்சம் பயம் இருந்தது என்று ஆனால் கேள்வித்தாளை பார்த்தவுடன் எங்களுக்கு பயம் போய்விட்டது என்றும் படித்த கேள்விகள் அனைத்தும் வந்திருந்தது என்றும் தெரிவித்தனர்.
 
ஒரு சில மாணவ மாணவிகள் மட்டும் ஒரு மதிப்பெண் கேள்வி மட்டும் கொஞ்சம் கடினமாக இருந்தது என்றும் ஆனால் மொத்தத்தில் கேள்வித்தாள் எளிதாக இருந்தது என்றும் தெரிவித்தனார். 
 
மொத்தத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு மாணவ மாணவிகளுக்கு எளிதாகவே இருந்ததாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெல்லும்.. திமுக கூட்டணி 2026 வரை நீடிக்காது: பிரேமலதா..!

விவசாயக் கடன் தள்ளுபடி.. பென்சன் வரம்பு உயர்வு.. 25 லட்சம் வேலைவாய்ப்பு! - மகாராஷ்டிரா பாஜக வாக்குறுதிகள்!

ஐப்பசி மாத பௌர்ணமி : சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி.. எத்தனை நாட்கள்?

பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் வழுக்கி விழுந்து உயிரிழப்பு? - அதிர்ச்சியில் வாசகர்கள்!

டிரம்ப் அமைச்சரவை.. எலான் மஸ்க்கிற்கு பதவி.. இந்திய வம்சாவளி பெண்ணுக்கு பதவி மறுப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments