Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

Siva
ஞாயிறு, 6 ஏப்ரல் 2025 (16:44 IST)
தமிழகத்திற்கு அதிக நீதியை மத்திய அரசு வழங்கி வருகிறது. ஆனாலும், ஒரு சிலர் "நிதி தரவில்லை" என அழுதுக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு அது மட்டுமே தெரியும். அழுதுக்கொண்டே இருப்பவர்களால், அழுதுக்கொண்டு மட்டும்தான் இருக்க முடியும் என பாம்பன் பாலத்தை திறந்தபின் பிரதமர் மோடி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
 
முதலில், அவர் தமிழில் "வணக்கம்" என்று ஆரம்பித்து, அதன் பிறகு மறைமுகமாக திமுக அரசை தாக்கினார். மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் கூட சிலர் அழுதுக்கொண்டே இருக்கிறார்கள் என்றும், அவர்களுக்கு அது மட்டுமே தெரியும் என்றும், அழுதுக்கொண்டே இருப்பவர்களால் அழுதுக்கொண்டு மட்டும்தான் இருக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
தமிழகத்திற்கு ரூ.6000 கோடி நிதி ரயில்வே பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு முன் ரயில்வே துறைக்கு மிகவும் குறைவான நிதிதான் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
 
தமிழகத்தில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் ஒரு கோடி பேர் பயன் அடைந்துள்ளனர் என்றும், மருந்துகள் வாங்க வேண்டும் என்றால் மக்கள் மருந்தகத்தில்   80 சதவீதம் தள்ளுபடி விலையில் மருந்துகள் கிடைக்கின்றன என்றும், தமிழகத்தில் 1400 க்கும் அதிகமான மக்கள் மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
 
ஏழை மாணவர்களும் பயன்பெறும் வகையில் மருத்துவ படிப்பை தமிழில் வழங்க தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்; அதுதான் எங்கள் விருப்பம் என்றும் அவர் கூறினார்.
 
நூறு ஆண்டுகளுக்கு முன் இதே பாம்பன் பாலத்தை கட்டியவர் ஒரு குஜராத்தி. புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைத்ததும் ஒரு குஜராத்தி ஆகிய நானே என்றும் அவர் பெருமையுடன் கூறினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

ராமேஸ்வரம் பாலம் திறப்பு விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..!

கணவன் துடிக்க துடிக்கக் கொலை! வீடியோ காலில் பார்த்து ரசித்த கொடூர மனைவி!

விமானத்திலிருந்து ராமர் பாலத்தை தரிசித்த பிரதமர் மோடி! - வீடியோ வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments