Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக வாக்காளர்களுக்கு தமிழில் டுவிட் போட்டு வேண்டுகோள் விடுத்த பிரதமர்!

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (07:14 IST)
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது என்பதும் பொதுமக்கள் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
தற்போது கோடை வெயில் கொளுத்தி வருவதன் காரணமாக வெயில் வருவதற்கு முன்னரே வாக்களிக்க வேண்டும் என்று பல வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். காத்திருக்கும் வாக்காளர்கள் தனிமனித இடைவேளையை கடைபிடிக்க தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்
 
மேலும் இன்று தமிழகம் உள்பட 3 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து பிரதமர் மோடி தமிழக, புதுவை, கேரள வாக்காளர்களுக்கு தனது டுவிட்டரில் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் தமிழக மக்களுக்கு தமிழில் டுவிட் செய்து கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் இன்று தேர்தல் நடைபெறுவதால் அதிக அளவில் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் என தமிழக மக்களை கேட்டுக் கொள்கிறேன் என்றும், இன்று நடைபெறும் தேர்தலில் அதிக அளவில் வாக்களிக்குமாறு புதுச்சேரி மக்களை கேட்டுக் கொள்கிறேன் என்றும் அவர் தமிழில் தெரிவித்துள்ளார் 
 
அதேபோல் கேரள மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில் மலையாளத்திலும் தனது டுவிட்டரில் பிரதமர் மோடி பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments