Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாஸுக்கு கட்டம் சரியில்ல - ஒரு வாரம் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு

Webdunia
செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (07:19 IST)
கைதுசெய்யப்பட்ட கருணாஸை ஒரு வாரம் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  கருணாஸ் கோபத்தில் ஆக்ரோஷமாக பேசினார். தி.நகர் துணை கமிஷனர் அரவிந்தை கடுமையாக விமர்சனம் செய்தார்.  அதேபோல், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் அவர் கடுமையாக விமர்சித்தார். மேலும் தனது ஜாதிப் பெருமையை இஷ்டத்திற்கு அளந்து பேசினார். 
 
இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை சாலிகிராமத்தில் உள்ள கருணாஸ் வீட்டிற்கு சென்ற, நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டியன் தலைமையிலான போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
 
இந்நிலையில் கருணாஸை ஒருவாரம் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் கருணாஸ் மீதான ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments