உமா மகேஷ்வரின் கொலை வழக்கில் துப்பு கிடைக்காமல் திணறி வந்த போலீஸாருக்கு ஒத்துப்போன சிசிடிவி காட்சி மூலம் சீனியம்மாள் என்ற பெண் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
முன்னாள் திமுக மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர் மற்றும் வீட்டில் வேலை செய்து வந்த பெண் என 3 பேரையும் மர்ம நபர்கள் கொலை செய்துள்ளனர். இதனால் நெல்லை பகுதியில் பெரும் பதட்டம் நிலவி வருகிறது.
இந்நிலையில் உமா மகேஸ்வரியை கொலை செய்த மர்ம நபர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. உமா மகேஷ்வரியின் வீட்டில் சிசிடிவி இல்லை என்பதால் அருகில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை சோதனை போலீஸார் செய்து வருகின்றனர்.
அப்படி மேற்கொண்ட சோதனையில் உணவகம் ஒன்றில் சாப்பிட்டு கொண்டிருந்த ஒரு பெண் உள்ளிட்ட மூவர் ஒரே நேரத்தில் பாதியில் சாப்பிடாமல் அவசர அவசரமாக புறப்பட்டு செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
இந்த மற்றும் மூவர் புறப்பட்டு செலும் நேரமும் உமா மகேஷ்வரி கொல்லப்பட்ட நேரமும் ஒத்துப்போய் உள்ளது. எனவே சந்தேகித்த போலீஸார் அந்த சிசிடிவி காட்சியை வைத்து அந்த பெண் சீனியம்மாள் என்பதை அடையாளம் கண்டுள்ளனர்.
சீனியம்மாள் மதுரையை சேர்ந்த திமுக பிரமுகர். உமா மகேஷ்வரிக்கு நெருக்கமானவர் என்பதும் அதன் பின்னர் தெரிய வந்தது. மேலும் சீனியம்மாள் குறித்து போலீஸார் விசாரிக்க, திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஆம், சீனியம்மாள் கடந்த 2016 தேதி நடந்த தேர்தலில் சங்கரன் கோவில் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட சீட்டு வாங்கி கொடுக்குமாறு ரூ.50 லட்சத்தை உமா மகேஷ்வரியின் கணவர் முருக சங்கரனிடம் கொடுத்துள்ளார்.
அந்த ஆண்டு சீட் வாங்கி கொடுக்கவில்லை, நீண்ட நாட்கள் கேட்டும் பணத்தையும் திரும்பி கொடுக்கவில்லையாம். இதனால் பணம் கேட்டு போனிலும் நேரிலும் முருக சங்கரனை தொடர்பு கொண்டுள்ளார் சீனியம்மாள்.
எனவே பணத்தகராறு காரணமாக இந்த கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சீனியம்மாள் மற்றும் அவருவன் வந்த இளைஞர்களை விசாரிக்க போலீஸார் முற்பட்டுள்ளனர்.