Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

சாத்தான்குளம் சம்பவம் குறித்து ஒரே ஒரு ஃபேஸ்புக் பதிவு: சஸ்பெண்ட் ஆன போலீஸ்

சாத்தான்குளம் சம்பவம் குறித்து ஒரே ஒரு ஃபேஸ்புக் பதிவு: சஸ்பெண்ட் ஆன போலீஸ்
, திங்கள், 29 ஜூன் 2020 (08:17 IST)
சாத்தான்குளம் சம்பவம் குறித்து ஒரே ஒரு ஃபேஸ்புக் பதிவு
கொரோனா வைரஸ் காலத்தில் கடந்த மூன்று மாதங்களாக வீட்டிற்கு கூட செல்லாமல் பல காவல்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் பணி செய்து கொண்டிருந்தனர் என்பதும் கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக அவர்கள் செய்த பணி சமூக வலைதளங்களில் பாராட்டப்பட்டது என்பதும் தெரிந்ததே 
 
ஆனால் சாத்தான்குளத்தில் நடந்த தந்தை மகன் மர்ம மரணத்திற்கு பின்னர் போலீசாரின் மதிப்பு அதலபாதாளத்துக்குச் சென்றது. காவல்துறையில் ஒரு சிலர் செய்த தவறால் ஒட்டு மொத்த போலீஸ் துறைக்கு களங்கம் ஏற்பட்டது மட்டுமின்றி தமிழக காவல்துறையின் குறித்து நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சாத்தான்குளம் சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் தனது முகநூலில் பதிவு செய்த ஆயுதப்படை காவலர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சதீஷ் முத்து என்ற ஆயுதப் படையில் பணிபுரிந்து வரும் சதீஷ் முத்து, தனது பேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை பதிவு செய்தார்
 
இந்த கருத்தால் சமூக வலைதளங்களில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இருப்பினும் அவர் இது குறித்து சதீஷ்முத்து கூறிய போது தனது முகநூல் கணக்கின் ரகசிய குறியீட்டு எண்ணை நண்பர்களிடம் பகிர்ந்ததாகவும் தான் அந்த பதிவை பதிவிடவில்லை என்று மறுப்புத் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்ததாகவும் தனது பேஸ்புக்கை தவறாக பயன்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். 
 
ஆனாலும் இந்த விளக்கத்தை மேலதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. சர்ச்சைக்குரிய பதிவு செய்த சதீஷ் முத்து என்பவர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. வேலைக்கு சேர்ந்து ஒரு சில வருடங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் ஒரே ஒரு பேஸ்புக் பதிவினால் தற்போது சதீஷ் முத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவை குறைத்து மதிப்பிட வேண்டாம்; போருக்கு ரெடியா இருங்க! – சீன ஆலோசகர் பகீர் எச்சரிக்கை!