Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’அரசியல் இப்போ இல்லைன்ன எப்பவும் இல்லை!’’ ரஜினி மக்கள் மன்றம் போஸ்டரால் பரபரப்பு !

Webdunia
வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (16:10 IST)
கொரோனா காலத்தில் அனைத்து தொழில்துறையினரும் முடங்கியிருந்தனர். இந்நிலையில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின் மக்கள் ஓரளவு நிம்மதி அடைந்தனர், சமீபத்தில் திரைப்படத்துறையினர் ஷூட்டிங் நடத்திக் கொள்ள மத்திய அரசால் அனுமதி அளிக்கப்பட்டது.ஆனால் தமிழக அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினி ஊரடங்கு காலத்தில் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அடுத்த வருடம் சட்டமன்றத்தேர்தல் தொடங்கவுள்ளதால் அவர் விரையில் கட்சி தொடங்கவேண்டுமென அவரது ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.

இந்நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகிறது. அதேசமயம் வரும் தேர்தலுக்கு முன் அவர் கட்சி தொடங்கவுள்ளதாகவும் அதில் முதல்வர் வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்பது குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் சென்னையில் ரஜியின்ன் அரசியல் வருகையைக் குறித்து அவராது ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்களால்  பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

அதில், உண்மையான நேர்மையான வெளிப்படையான ஊழலற்ற ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் இபோ இல்லைன்ன எப்பவும் இல்லை! மாற்றத்தை நோக்கி தமிழகம் என்று ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் கழுத்தில் பன் மாலைகளை அணிந்து ஆர்ப்பாட்டம்!

ராகுல் காந்தி நாக்கை அறுத்தால் ரூ.11 லட்சம் பரிசு.. ஷிண்டே கட்சி எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு..!

குறைந்து வரும் மக்கள் தொகை..! "நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதல் செய்யுங்கள்" - ரஷ்ய அதிபர் வேண்டுகோள்.!!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழுத்தம்.. விரும்பியவரை முதல்வராக்க முடியவில்லை: பாஜக

மருத்துவர்கள் பேச்சுவார்த்தை நேரலைக்கு தடை விதிக்க முடியாது.! மேற்குவங்க கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments