Daily Horoscope
✕

பொள்ளாச்சி' தனி மாவட்டம் ஆகுமா? துணை சபாநாயகர் தகவல்

Webdunia
வியாழன், 10 ஜனவரி 2019 (19:05 IST)
தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரிக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ள நிலையில் சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் அறிவிக்கப்பட்டது. மேலும் வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரிக்கும் ஆலோசனையும் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கோவை, திருப்பூர் மாவட்டங்களின் சில பகுதிகளை இணைத்து, பொள்ளாச்சி மாவட்டம் என்ற புதிய மாவட்டம் ஒன்றை உருவாக்க முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து முதல்வரிடம் இருந்து விரைவில் நல்ல தகவல் வரும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

புதியதாக உருவாகவுள்ள பொள்ளாச்சி மாவட்டத்தில், உடுமலை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, ஆனைமலை ஆகிய நகரங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையே பயணிகள் கப்பல்.. மத்திய அரசிடம் ரூ.9,618 கோடி நிதியுதவி கேட்ட தமிழக அரசு...

திருப்பரங்குன்றம் விவகாரம்.. திமுக செய்த அதே தவறை தவெக செய்கிறதா?

சென்னை மாஸ்டர் பிளானில் முக்கிய மாற்றம்! பூந்தமல்லி அருகே உள்ள மக்களுக்கு செம்ம ஜாக்பாட்...

விஜய் அரசின் அண்ணன் சீர் திட்டம்.. திருமணத்திற்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும்.. முழு விவரங்கள்...

பிரியங்கா காந்தி சொன்னதை உடனே நிறைவேற்றிய விஜய்.. டெல்லியில் நடந்த சம்பவம்..

அடுத்த கட்டுரையில்
Show comments