Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவை நம்பினா பாகிஸ்தானுக்கு விரட்டி விட்ருவாங்க! – முஸ்லீம்களுக்கு பொன்னார் அட்வைஸ்!

Webdunia
வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (11:02 IST)
இந்துக்களின் ஓட்டுக்களை பெற இஸ்லாமியர்களை திமுக பாகிஸ்தானுக்கு துரத்தி விடும் என பாஜக முன்னாள் எம்.பி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தமிழக பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் பாஜக முன்னாள் எம்.பி பொன்.ராதாகிருஷ்ணன். அப்போது பேசிய அவர் ”மீண்டும் ஒரு பாகிஸ்தான் உருவாக நாம் விட்டுவிட கூடாது. வெளியிலிருந்து வருபவர்களை அன்போடு பார்த்துக்கொள்ளும் வழக்கம்தான் இந்தியாவில் உள்ளது. காங்கிரஸ் செய்த தவறுகளை பாஜக சரிசெய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறது” என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் “தமிழக இஸ்லாமிய மக்கள் திமுகவின் பேச்சை நம்ப வேண்டாம். திமுகவை நம்பினால் பெரும்பான்மை இந்துக்களின் ஓட்டுக்களை பெற இஸ்லாமியர்களை பாகிஸ்தானுக்கு துரத்தி அடிப்பார்கள். பிரதமர் மோடி இந்துக்களுக்கு மட்டும் வேலைக்காரன் என சொல்லவில்லை. தான் 130 கோடி மக்களுக்கும் வேலைக்காரன் என்று சொன்னவர்.” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments