Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த ஆண்டு பொங்கல் பரிசுத்தொகை எவ்வளவு.. தமிழக அரசின் தீவிர ஏற்பாடு..!

Webdunia
புதன், 13 டிசம்பர் 2023 (12:16 IST)
சென்னை உள்பட நான்கு மாவட்ட மக்களுக்கு வெள்ள பாதிப்பு நிவாரண நிதியாக ரூ.6000 வழங்கும் ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் அடுத்த கட்டமாக பொங்கல் பரிசு தொகை வழங்கும் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 வழங்கியவுடன் அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு 1000 ரூபாய் வழங்க ஏற்பாடுகள் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.  

ரொக்கத் தொகை மட்டும் இன்றி பொங்கல் செய்வதற்கு தேவையான பச்சரிசி வெல்லம் உள்பட அனைத்து பொருள்களும் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்தில் தமிழக அரசு பரிசு பொருட்கள் வாங்கி வரும் நிலையில் இந்த ஆண்டு  நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருப்பதால் கூடுதலாக சில ஆச்சரியங்கள் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஷ்மீருக்கு அமெரிக்கர்கள் சுற்றுலா செல்ல வேண்டாம்: அமெரிக்க வெளியுறவுத்துறை..!

பாகிஸ்தான் வான்வெளி தடை: சுற்றி செல்லும் விமானங்கள்.. கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு..!

”திரும்ப காஷ்மீருக்கே போங்க?” காஷ்மீர் மாணவர்களை தாக்கி அச்சுறுத்தும் வட மாநிலத்தவர்கள்!

பெஹல்காம் தாக்குதல் எதிரொலி: 2வது நாளாக இறங்கிய பங்குச்சந்தை.. !

தங்கம் விலை இன்று ஏற்றமா? இறக்கமா? சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments