Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெங்காயத்தோடு போட்டி போடும் உருளைக்கிழங்கு! – பொதுமக்கள் அதிர்ச்சி!

Webdunia
வெள்ளி, 23 அக்டோபர் 2020 (11:13 IST)
சமீப காலமாக வெங்காய விலை அதிகரித்து வரும் அதிர்ச்சியிலிருந்தே மக்கள் மீளாத நிலையில் உருளைக்கிழங்கும் விலை அதிகரித்து வருவது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடமாநிலங்களில் அதீத மழை காரணமாக வெங்காய சாகுபடி குறைந்துள்ளதால் தமிழகத்திற்கு வெங்காய வரத்தும் குறைந்துள்ளது. இதனால் வெங்காய விலை அதிகரித்து கிலோ ரூ.100க்கும் அதிகமாக விற்பனையாகிறது. இந்நிலையில் தமிழக அரசு எகிப்து, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் வெங்காயத்தை இறக்குமதி செய்து குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க ஏற்பாடுகளை செய்து வருகிறது,.

இந்நிலையில் தற்போது உருளைக்கிழங்கு விலையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள உருளைக்கிழங்கு மண்டிகளுக்கு உருளைக்கிழங்கி வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது. 45 கிலோ உருளைக்கிழங்கு மூட்டை விலை வழக்கமான விலையை விட ரூ.1000 விலை உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கிலோ உருளை ரூ.100 விற்று வரும் நிலையில் மேலும் விலை அதிகரிக்கலாம் என கூறப்படுவதால் மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments