Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் மழை தொடரும் - பிரதீப் ஜான்!

Webdunia
திங்கள், 12 ஏப்ரல் 2021 (10:18 IST)
தமிழக வெதர்மேன் பிரதீப் ஜான், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது என தகவல். 

 
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல இடங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. வழக்கத்தை விட 2 அல்லது 3 டிகிரி வெயில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்த நிலையில் அனல்காற்றும் வீசுவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
 
இந்நிலையில் நேற்று முதலாக தமிழகத்தில் சில பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. சென்னையில் கோயம்பேடு, அண்ணாநகர் பகுதிகளில் மிதமான அளவு மழை பெய்ததால் சூடு தணிந்தது. அதேபோல புதுக்கோட்டையில் அறந்தாங்கி, விராலிமலை, ஆலங்குடி, வடகாடு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
 
இதனிடையே, 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்பு என  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம். பெரம்பலூர் அகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. 
 
இது குறித்து தமிழக வெதர்மேன் பிரதீப் ஜான், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடியில் மழைக்கு வாய்ப்பு என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை.. இந்திய விமானப்படை அதிரடி அறிவிப்பு..!

காஷ்மிர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments