Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியை கெடுத்த குடி..! கணவரின் மதுப்பழக்கத்தால் கர்ப்பிணி பெண் தற்கொலை முயற்சி!

Prasanth Karthick
செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (11:08 IST)
கணவனின் குடிப்பழக்கத்தால் விரக்தியடைந்த கர்ப்பிணி பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்ட சம்பவம் கன்னியாக்குமரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கன்னியாக்குமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் பகுதியை சேர்ந்தவர் அபிஜித். ரப்பர் தொழிற்கூடத்தில் வேலை பார்க்கும் இவருக்கும் ரஞ்சிதா என்ற பெண்ணுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது.

தற்போது ரஞ்சிதா 9 மாதங்கள் கர்ப்பமாக உள்ள நிலையில் தனது தாயார் வீட்டில் பிள்ளைபேறுக்காக இருந்துள்ளார். இதனிடையே அபிஜித் மதுவுக்கு அடிமையானதாக தெரிகிறது. அடிக்கடி ரஞ்சிதாவை பார்க்க வரும் அபிஜித் குடித்து விட்டு வந்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்த நிலையில் ஆத்திரமடைந்த ரஞ்சிதா மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அபிஜித் அவரை காப்பாற்ற முயற்சிக்கவே தீ அவர் மீதும் பரவியது.

இருவரும் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கணவரின் அதீத குடிப்பழக்கத்தால் குடும்பத்தில் ஏற்பட்ட இந்த விபத்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.80 கட்டணத்தில் நாள் முழுவதும் பயணம்.. ராமேஸ்வரம் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

சிறுமி கொலை வழக்கு.! கைதானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நிறைவு..!!

பதவியை ராஜினாமா செய்த உயர்நீதிமன்ற நீதிபதி.. பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டி..!

பம்பரம் சின்னம் கோரிய வழக்கு.! தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு.!!

.விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பெண் பயணி!

அடுத்த கட்டுரையில்
Show comments