சென்னையில் தேமுதிக சார்பில் நடந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த் இந்தியா இந்துக்கள் நாடு என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
இன்று சென்னையில் தேமுதிக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் அவர்கள் ’தொண்டர்களே எனது முதல் கடவுள் என்றும் மக்களுக்கு நல்லது செய்ய விரைவில் மீண்டு வருவேன் என்றும் கூறி இருப்பது அக்கட்சி தொண்டர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் அதே நிகழ்வில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தைப் பேசியுள்ளார். சி ஏ ஏ குறித்துப் பேசிய அவர் ‘இந்த சட்டத்துக்கு எதிராக குரல்கள் எழுந்துள்ளன. அதே போல ஆதரவும் உள்ளது.. ஆனால், நாம் சரியாக சிந்தித்து சொல்வோம். இந்தியா என்றால் இந்துக்கள் நாடுதான். அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் எல்லா மதத்தவர்களும் இங்கு சகோதரத்துவத்துடன் பழகி வருகிறார்கள்.’ எனப் பேசியுள்ளார். இந்திய அரசியலமைப்புப் படி இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பது குறிப்பிடத்தகக்து.