Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கேப்டன் பேரை சொல்லி விஜய் ஓட்டுப்பிச்சை எடுக்கிறார்!.. பிரேமலதா பிரச்சாரம்!..

Advertiesment
premalatha
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகிற 23ம் தேதி நடைபெறவிருப்பதால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. ஒரு பக்கம் எடப்பாடி பழனிச்சா,மி ஒருபக்கம் முக ஸ்டாலின், ஒருபக்கம் விஜய், ஒருபகக்ம் சீமான், ஒருபக்கம் பிரேமலதா விஜயகாந்த் பலரும் பல தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

வழக்கம்போல ஒருவரை ஒருவரை திட்டி, தாக்கி ஆவேசமாக பேசுகிறார்கள்.. மக்களுக்கு நல்லது செய்ய தங்களிடம் என்ன திட்டங்கள் இருக்கிறது.. ஆட்சியில் இருந்தபோது என்னென்ன திட்டங்களை செய்தோம்.. பிரச்சினைகளை தீர்ப்பதற்கு என்ன வழி என்பதற்கான தெளிவான பார்வை பற்றியெல்லாம் பேசாமல் தங்களின் அரசியல் எதிரிகளை திட்டுவதற்காகவே அவர்கள் தங்களின் தேர்தல் பிரச்சாரங்களை பயன்படுத்தி வருகிறார்கள்..

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரம் செய்த பிரேமலதா  ‘இப்போது கேப்டன் உயிரோடு இருந்திருந்தால் கூட விஜயுடன் கூட்டணி வைத்திருக்க மாட்டார்.. கேப்டனுக்கு திமுக கூட்டணியில் இணைய வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாளாக இருந்தது. சும்மா விஜயகாந்தின் தம்பி என்று கூறிக்கொண்டு ஓட்டு பிச்சை எடுக்க வேண்டாம்.. நாங்கள் திமுக கூட்டணியில் ஆட்சி அமைப்போம்’ என கூறியிருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய் தன்னை விஜயகாந்தின் தம்பி என சொல்லியிருந்தார்.. அதற்கு பதிலடியாகவே பிரேமலதா இப்படி பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லெபனான் குடியிருப்பு பகுதியை தாக்கிய இஸ்ரேல்!.. வீடுகள் தரைமட்டம்!. பலரும் பலி!..