Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

அதிமுகவை வெட்டி விட ஸ்கெட்ச்? கூட்டணியில் வெடி வைக்க காத்திருக்கும் பிரேமலதா

அதிமுகவை வெட்டி விட ஸ்கெட்ச்? கூட்டணியில் வெடி வைக்க காத்திருக்கும் பிரேமலதா
, திங்கள், 3 பிப்ரவரி 2020 (13:29 IST)
அனைத்துக் கட்சிகளும் கூட்டணி தர்மத்தை கடைபிடிக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள தேமுதிக அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது. சமீபத்தில், உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற தேமுதிக வேட்பாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விழா தேமுதிக தலைவர் விஜயகாந்த் முன்னிலையில் நடைபெற்றது. 
 
அதில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் தேமுதிகவுக்கு மக்களிடம் இன்னமும் செல்வாக்கு இருக்கிறது என்பதற்கு உதாரணமாய் உள்ளாட்சி தேர்தல் வெற்றி அமைந்திருப்பதாக கூறினார். அதோடு, கூட்டணியில் இருப்பதால் குட்ட குட்ட குனியமாட்டோம். குட்டு வாங்கும் சாதி இல்லை நாங்கள். வருகிற 2021 ஆம் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று விஜயகாந்த் தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று பேசினார். 
webdunia
பிரேமலதா விஜயகாந்த் குட்ட குட்ட குனிய மாட்டோம் என பேசியிருப்பது அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு உள்ள பிரச்சினையின் வெளிப்பாடு என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிப்பட துவங்கியது. எனவே தற்போது இதற்கு விளக்கம் அளித்துள்ளார். 
 
சென்னை விமான நிலையத்தில் இது குறித்து அவர் பேசியதாவது, கூட்டணி தர்மத்தை கடைபிடித்து தேமுதிக நடப்பதாகவும், ஆனால் தங்களை போல் அனைத்துக் கட்சிகளும் கூட்டணி தர்மத்தை கடைபிடிக்க வேண்டும் என நான் தெரிவித்தேன். மேலும், சட்டமன்றத் தேர்தல் கூட்டணி பற்றி அந்த நேரத்தில் கலந்து பேசி முடிவை அறிவிப்போம் என தெரிவித்தார். 
 
எனவே தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக தனது கூட்டணியை தொடருமா? அல்லது தனித்து போட்டியிடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுகவின் திட்டத்தை வரவேற்கிறேன்! எதுக்கு தெரியுமா…? – எச்.ராஜா ட்வீட்!