ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதுக்காக சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி அர்ஜென்டினா சென்று இருந்தார். அப்போது அந்த நாட்டின் டெலிவிஷன் ஒன்று அபு என்ற கார்ட்டூனுடன் பிரதமரை ஒப்பிட்டு கேலி செய்தது. நம் நாட்டின் பிரதமரை இப்படி அவமதிக்கலாமா? என குஷ்பு கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:–
‘‘இது இந்தியாவுக்கான தேசிய அவமானம். அரசியலில் கொள்கை ரீதியாக நமக்குள் வேறுபாடுகள் இருக்கலாம். எப்போதுமே முட்டி மோதிக்கொள்ளவும் செய்யலாம். ஆனால் நமது நாட்டு பிரதமரை அவமதிப்பது என்பதை ஏற்க முடியாது. நமக்குள் தனிப்பட்ட விரோதங்கள் எதுவும் கிடையாது. கொள்கை மாறுபாடுகள் ஏற்படுவதும் அதற்காக மோதிக்கொள்வதும் வேறு. ஆனால் கேவலப்படுத்தும் இந்த கார்ட்டூனை ரசிக்க தொடங்கினால் நமக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். அதனால் அப்படி செய்வதை நிறுத்துங்கள்.’’ இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.