Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி, ஜி ஜின்பிங் வருகையால் கோவளத்தில் பாதுகாப்பு தீவிரம் !

Webdunia
புதன், 18 செப்டம்பர் 2019 (15:12 IST)
மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் மாமல்லபுரம் வருவதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியா-சீனா இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் நிலவிவரும் நிலையில், சீனாவிலுள்ள உகான் நகரில் முதல் முறைசாரா உச்சி மாநாடு கடந்த ஆண்டு ஏப்ரல் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அதில் இந்திய பிரதமர் மோடியும் சீனப் பிரதமர் ஜி ஜின்பிங்கும் கலந்து கொண்டனர்.

இரு நாடுகளுக்கு இடையேயான இரண்டாவது முறைசாரா உச்சி மாநாடு வரும் அக்டோபர் மாதம் தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள சீன பிரதமர் ஜி ஜின்பிங் அக்டோபர் 11 ஆம் தேதி வருகிறார். அப்போது மோடியும் ஜி ஜின் பிங்கும் மாமல்லபுரத்தில் உள்ள நினைவுச் சின்னங்களை பார்வையிடுகின்றனர்.

இதற்காக கோவளத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்று தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவளம் பகுதியில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு சம்மந்தமாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மேற்பார்வையிட்டுள்ளார். சாலைகளைச் சீரமைப்பது, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவது ஆகிய பணிகளும் மேற்கொள்ள பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

விஜய் அரசியல் வருகையால் தேமுதிகவுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. தொடங்கியது பேச்சுவார்த்தை..!

ஆடை அணியாமல் திருமணம் செய்த 29 ஜோடிகள்.. வினோத நிகழ்வு..!

கவர்னர் பதவியையும் பறிகொடுத்து நிற்பவர் தமிழிசை.. மக்கள் நீதி மய்யம் விமர்சனம்..!

எத்தனை முறை கேட்டாலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை.. கொந்தளித்த ஈபிஎஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments