Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் சொத்து வரிகள் உயர்வு – விவரம் உள்ளே!

Webdunia
சனி, 2 ஏப்ரல் 2022 (09:25 IST)
தமிழகத்தில் சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான தகவல் பின்வருமாறு... 

 
சென்னை மாநகராட்சியின் பிரதானப் பகுதிகளில் 600 சதுர அடிக்கு குறைவான குடியிருப்பு கட்டடங்களுக்கு 50% சொத்து வரி உயர்த்தப்படுகிறது. 600 முதல் 1,200 சதுர அடி வரையுள்ள குடியிருப்புகளுக்கு 75%, 1,201 முதல் 1,800 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்புகளுக்கு 100% சொத்து வரி உயர்த்தப்படுகிறது. 1,801 சதுர அடிக்கு மேல் சொத்து வரி 150% உயர்த்தப்படுகிறது.
 
இதேபோல, சென்னையோடு 2011 ஆம் ஆண்டு இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் பிற மாநகராட்சிகளில் 600 சதுர அடிக்குக் குறைவான குடியிருப்புகளுக்கு 25% சொத்து வரி உயர்த்தப்படுகிறது. 600 முதல் 1,200 சதுர அடி பரப்புள்ள குடியிருப்புகளுக்கு 50%, 1,201 முதல் 1,800 சதுர அடி பரப்புள்ள குடியிருப்புகளுக்கு 75% சொத்து வரி உயர்த்தப்படுகிறது. ஆயிரத்து 801 சதுர அடிக்கு மேல் பரப்புள்ள குடியிருப்புகளுக்கான சொத்து வரி 100% உயர்த்தப்படுகிறது.
 
சென்னையின் பிரதான நகரப் பகுதிகளில் வணிகப் பயன்பாட்டு கட்டடங்களுக்கு 150%, தொழிற்சாலை மற்றும் கல்வி நிலையக் கட்டடங்களுக்கு 100% சொத்து வரி உயர்த்தப்படுகிறது. சென்னையோடு 2011 ஆம் ஆண்டு இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இதர மாநகராட்சிகளில் வணிகப் பயன்பாட்டுக் கட்டடங்களுக்கு 100%, தொழில் மற்றும் கல்வி நிலையங்களுக்கு 75 %சொத்து வரி உயர்த்தப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments