Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்கும் கருணாநிதி பெயர்.. எழும்பூர் ரயில் நிலையத்திற்கும் வைக்க கோரிக்கை..!

திமுக
Mahendran
செவ்வாய், 22 ஏப்ரல் 2025 (10:09 IST)
திமுக ஆட்சி தொடங்கிய கடந்த நான்கு ஆண்டுகளில் கருணாநிதியின் பெயர் பல இடங்களுக்கு வைக்கப்பட்ட நிலையில் தற்போது எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வைக்க வேண்டும் என எம்பிக்கள் வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
சென்னையில் நேற்று  சென்னை ரயில்வே கோட்டத்திற்கான எம்பிக்களின் கலந்தாலோசனை கூட்டம் நடந்த போது, இந்த கூட்டத்திற்கு தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் டி ஆர் பாலு, தயாநிதி மாறன், கனிமொழி,  சோமு, சசிகாந்த்,  கதிர், ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், வட மாநிலங்களில் இருந்து வரக்கூடிய ரயில்கள் தாம்பரம் நிலையத்தில் நிறுத்தப்படுவதில்லை என்றும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டி ஆர் பாலு வலியுறுத்தினார்.

மேலும், இந்த கூட்டத்தை ஆண்டுக்கு ஒரு முறை நடத்தாமல், மூன்று மாதத்திற்கு ஒருமுறை நடத்த வேண்டும் என கதிர் ஆனந்த் வலியுறுத்தினார். தயாநிதி மாறன் எம்பி எழும்பூர் ரயில் நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை வைக்க வேண்டும் என்று கூறினார்.

ஏற்கனவே, சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் வைத்துள்ள நிலையில், எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் வைக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருச்செந்தூரில் வைகாசி விசாக திருவிழா எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!

இனி வெயில் இல்லை, இடி மின்னலுடன் மழை தான்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் திட்டம் தோல்வி.. இஸ்ரோ அதிர்ச்சி அறிவிப்பு..!

வங்கதேசத்துடன் வணிகத்தை குறைக்கிறது இந்தியா.. $700 மில்லியன் ஏற்றுமதி பாதிப்பா?

சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர்.. மும்பையில் 250 பேர், ஹரியானாவில் 237 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments